கண்டியன்குளத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

செம்பனார்கோயிலில் உள்ள கண்டியன்குளத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது,
தீமிதி திருவிழா நடந்தது.
தீமிதி திருவிழா நடந்தது.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் உள்ள கண்டியன்குளத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 3ஆம் தேதி பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 6ம் தேதி முதல் சிறப்பு அலங்காரத்தில் அம்மனை எழுந்தருளச் செய்து வீதிஉலா காட்சி நடந்தது.

நேற்று முன்தினம் தீமிதி திருவிழாவையொட்டி வல்லம் கிராமத்தில் உள்ள பொன்முத்து மாரியம்மன் கோயிலில் இருந்து காப்பு கட்டிய ஏராளமான பக்தர்கள் காவடி மற்றும் கரகத்தை வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க வீதிஉலாவாக எடுத்து சென்று கோயிலை அடைந்தனர். அங்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்ட அம்மன் முன்னிலையில், பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கடிச்சம்பாடி, வல்லம், பழைய திருச்சம்பள்ளி, செம்பனார்கோயில் ஆகிய கிராமங்களை சேர்ந்த நாட்டாண்மைகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com