search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்கெட் கடை வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
    X

    மனு கொடுக்க வந்த காய்கறி வியாபாரிகளை படத்தில் காணலாம்.

    மார்க்கெட் கடை வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

    • மாநகராட்சி ஊழியர்கள் கடைகளை காலி செய்ய வேண்டுமென கூறுகிறார்கள்.
    • 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் எம்.ஜி.ஆர் மார்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் சாதிக் பாஷா தலைமையில், 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர்., மார்கெட் பின்புறம் சந்தைப்பேட்டையில், கடந்த, 2005-ம் ஆண்டு முதல் 250-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி, பெரியவெங்காயம் மற்றும் உருளைகிழங்கு வியாபாரம் செய்து வருகிறோம். இந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் திடீரென வந்து இங்கு வணிக வளாகம் கட்ட இருப்பதால் உடனடியாக நீங்கள் கடைகளை காலி செய்ய வேண்டுமென கூறுகிறார்கள். அதிகாரிகளின் இந்த செயலால் அதிர்ச்சி யடைந்துள்ளோம். இதையே நம்பி வாழந்து வரும் எங்கள் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்களுக்கு வேறு இடமாவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×