search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்காளியம்மன் கோவிலில் மார்கழி உற்சவ திருவிழா தொடக்கம்
    X

    பொன்காளியம்மன் கோவிலில் மார்கழி உற்சவ திருவிழா தொடக்கம்

    • புதன்கிழமை, சத்யசாய் சேவா சமிதி பஜனை, வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.
    • தினமும் நிகழ்ச்சிக்கு பின்னர் அன்னதானம் வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் சத்யசாய் சேவா சமிதி, பல்லடம் தமிழ்சங்கம் ஆகியவை சார்பில் மார்கழி உற்சவ பெருவிழா நேற்று 4ந்தேதி தொடங்கியது. வரும் 13 ந்தேதி வரை பல்லடம் பொன்காளியம்மன் கோயில் வளாகத்தில் விழா நடைபெறும். தினந்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.

    நேற்று புதன்கிழமை, சத்யசாய் சேவா சமிதி பஜனை, வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இன்று 5ந்தேதி சாய் அற்புதம் திருப்பூர் ஆடிட்டர் நடராஜ் ஆன்மீக சொற்பொழிவு, 6 ந்தேதி கோவை ஸ்ரீ சாரதா நாராயணன் குழுவினரின் பஜனை கச்சேரி, ஆன்மீக பாட்டு கச்சேரி, 7 ந்தேதி அன்னூர் அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் ஆன்மீக பாட்டு கச்சேரி, 8 ந்தேதி பல்லடம் ஸ்ரீசாய் நாட்டியாலயாவின் பரத நாட்டியம், 9 ந்தேதி திங்கள்கிழமை கவிஞர் சுந்தரபாண்டியனி்ன் திருநாவுக்கரசுத்திருமகனார் ஆன்மீக சொற்பொழிவு, 10 ந்தேதி பக்தியிலும் பண்பாட்டிலும் பெரிதும் விஞ்சி நிற்பவர்கள் ஆண்களா, பெண்களா என்ற தலைப்பில் நடுவர் புலவர் சிவக்குமார் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம், 11 ந்தேதி மார்கழியின் மகிமை என்ற தலைப்பில் ஞானபாரதி ஆனந்தகிருஷ்ணனின் ஆன்மீக சொற்பொழிவு, 12 ந்தேதி மாணிக்கவாசகப்பெருமானார் என்ற தலைப்பில் கவிஞர் சுந்தரபாண்டியனின் ஆன்மீக சொற்பொழிவு, 13 ந்தேதி வரம் தரும் வராகி என்ற தலைப்பில் ஈரோடு கவிஞர் பத்மநாபன் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.தினமும் நிகழ்ச்சிக்கு பின்னர் அன்னதானம் வழங்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×