கோவையில் போக்குவரத்து போலீசை தாக்க முயன்றவர் கைது

விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தியதால் வாக்குவாதம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்லினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவையில் போக்குவரத்து போலீசை தாக்க முயன்றவர் கைது
Published on

கோவை. 

கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் போக்குவரத்து காவலராக இருப்பவர் மதுசூதனன். இவர் நேற்று மருதமலை அடிவாரத்தில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அங்கு கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த இளநீர் கடை நடத்தி வரும் மார்லின்(35), என்பவர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வேகமாக வந்தார்.

இதை பார்த்த போலீஸ்காரர் மதுசூதனன், மார்லின் வாகனத்தை நிறுத்தினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மார்லின், போக்குவரத்து போலீஸ்காரரை தாக்க முயன்றார்.

இதுகுறித்து மதுசூதனன் கோவை ஆர்எஸ். புரம் போலீசில் புகார் செய்தார்.பு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்லினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com