நோயாளியிடம் செல்போன் திருடியவர் கைது

சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வரும் வார்டில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஒரு மர்ம நபர் புகுந்தார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த நோயாளிகள் 2 பேருடைய செல்போன்களை எடுத்துக் கொண்டு நைசாக நழுவ முயன்றார்.
நோயாளியிடம் செல்போன் திருடியவர் கைது
Published on

சேலம்:

சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வரும் வார்டில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஒரு மர்ம நபர் புகுந்தார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த நோயாளிகள் 2 பேருடைய செல்போன்களை எடுத்துக் கொண்டு நைசாக நழுவ முயன்றார். இதை கண்ட நோயாளிகளுடன் தங்கி இருந்த உறவினர்கள் உடனடியாக கூச்சலிட்டு அருகில் இருந்த நபர்களின் உதவியுடன் மர்ம நபரை பிடித்து சேலம் அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட நபர் சேலம் மாவட்டம் வாழப்பாடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சிவராஜ் (வயது 58) என்பது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com