வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது

வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக அடிமாலி போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.போலீசார் வாலிபரை கைது செய்து கஞ்சா செடிகளை வெட்டி அழித்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கூடலூர்:

மூணாறு அருகே உள்ள ராஜா காடு பழைய விடுதி காலனியைச் சேர்ந்தவர் ஜோய் மகன் சனீஸ் (வயது 27). இவரது வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக அடிமாலி போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடி ப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் அதிடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் தோட்டத்தில் 246 ெ ச.மீ நீீளமுள்ள ஒரு கஞ்சாசெடியும், 66 செ.மீ நீளமுள்ள மற்றொரு கஞ்சா செடியையும் கண்டு பிடித்தனர்.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சா செடிகளை வெட்டி அழித்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com