நிதி நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது

நிதி நிறுவனத்தில் என்னை திட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.தலையில் காயம் அடைந்த கணேசன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிதி நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது
Published on

காஞ்சிபுரம்:

ஆரணி கண்ணப்பன் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 25). இவர் காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வங்கியில் கடன் வாங்கி, வார தவணையில் செலுத்தி வரும் காஞ்சிபுரம் உப்பேரிகுளத்தை சேர்ந்த அபிபுல்லா என்பவரிடம் பணம் வசூலிக்க சென்றார். அப்போது அபிபுல்லா தான் செலுத்தவேண்டிய ரூ.1,340-க்கு பதிலாக ரூ.600 மட்டும் கொடுத்தார்.

இதற்கு கணேசன் முழு பணமும் கொடுத்தால்தான் செல்வேன். இல்லையென்றால் நிதி நிறுவனத்தில் என்னை திட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அபிபுல்லா வீட்டுக்குள் சென்று தனது மகன் இலியாஸிடம் தெரிவித்தார். வீட்டில் இருந்து வெளியே வந்த இலியாஸ், நிதி நிறுவன ஊழியரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதனால் தலையில் காயம் அடைந்த கணேசன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த விஷ்ணுகாஞ்சி போலீசார் இலியாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com