மாநில டென்பின் பவுலிங் போட்டி 2024 - ஆனந்தை வீழ்த்தி பட்டம் வென்றார் மஹிபால் சிங்

ஆனந்தை வீழ்த்தி இரண்டாவது பட்டம் வென்றார் மஹிபால் சிங்.பட்டம் வென்ற மஹிபால் சிங்கிற்கு பரிசளித்த விஜே அஞ்சனா.
மாநில டென்பின் பவுலிங் போட்டி 2024 - ஆனந்தை வீழ்த்தி பட்டம் வென்றார் மஹிபால் சிங்
Published on

சென்னை, துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் (LetsBowl) மையத்தில் 2வது நெரோலக் பெயிண்ட் தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி 2024 நடைபெற்றது.

இதன் இறுதிப் போட்டியில் மகிபால் சிங், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆனந்த் பாபுவை (399-394) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில் ஆனந்த் பாபு, மஹிபால் சிங்கை விட ஒரு பின் என்ற மெல்லிய வித்தியாசத்தில் பின்தங்கி இருந்தார்.

2வது போட்டியில், மஹிபால் 4 பின்களில் ஆனந்தை வீழ்த்தி, 5 பின்களின் (399-394) குறுகிய வித்தியாசத்தில் இந்த ஆண்டின் இரண்டாவது பட்டத்தை வென்றார்.

6 போட்டிகளில் அதிகபட்ச சராசரி : மஹிபால் சிங் (234.67)

18 போட்டிகளுக்குப் பிறகு அதிகபட்ச சராசரி : மஹிபால் சிங் (220.17)

இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் வி.ஜே.அஞ்சனா ரங்கன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com