அழகர்கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

மதுரை அழகர்கோவிலில் இன்று பங்குனி திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அழகர்கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்.
அழகர்கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம்.
Published on

அலங்காநல்லூர்

திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படும் 108வைணவ தலங்களில் ஒன்றானது மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். 

இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த விழா கடந்த 15ந்தேதி தொடங்கி 5நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. 

முக்கிய நிகழ்ச்சியாக 4ம் திருநாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் காலை 9.30மணிக்கு மேல் 10.30மணிக்குள் திருக் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். 

கள்ளழகர் என்ற சுந்தர ராஜப் பெருமாளுக்கும் 4பிராட்டிமார்களுக்கும் ஊஞ்சலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு  மலர்களும், திருமாங்கல்ய கயிறும் வழங்கப்பட்டது. 

இன்று இரவு சுந்தரராஜ பெருமாள் 4பிராட்டிமார்களுடன் ஒரே சப்பரத்தில் புறப்பாடாகி சன்னதியில் எழுந்தருளி சேவை சாதித்தல் நடைபெறும். நாளை 5ம் திருநாள் நிகழ்ச்சியாக சுந்தரராஜ பெருமாள், 4 பிராட்டிமார்களுடன் சன்னதியில் சேர்த்தி திருமஞ்சனம் நடைபெறும். 

மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி மஞ்சள் நீர்சாற்றுமுறை நடைபெறும். இத்துடன் பங்குனி பெருந்திருவிழா நிறைவுபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம் துணை ஆணையர் அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com