என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெறிநாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்
    X

    மதுரை வில்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மேயர் இந்திராணி வழங்கினார். அருகில் ஆணையாளர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன் உள்ளனர். 

    வெறிநாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

    • வெறிநாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
    • ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா அருகில் மாநகராட்சி சார்பில் வெறி நாய்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. மேயர் இந்திராணி தலைமை வகித்தார். ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு முகாமில் மண்டலம் 3-க்கு உட்பட்ட56, 57, 58 ஆகிய வார்டுகளில் திரியும் 111 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தெருக்களில் பொது மக்களை அச்சு றுத்தும் வகையிலும், போக்குவரத்து இடையூ றாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் நாய்கள் சுற்றி திரிகின்றன.

    பல்வேறு இடங்களில் பொதுமக்களை நாய்கள் கடித்தாக புகார்கள் வந்தன. இதையடுத்து ''நாய்கடி ரேபிஸ்" தடுப்பு நடவடிக்கையாக மாநக ராட்சி சார்பில் வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 18.9.2023 முதல் 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை அந்த அந்த பகுதிகளில் வரும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

    இம்முகாமில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் வினோத் குமார், உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேசு வரன், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் கவிதா, கால்நடை மருத்துவர் ஜெயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×