

திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மேலஉரப்பனூரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுந்தரபாண்டி(வயது 25), தொழிலாளி.
இவர் தனது நண்பர்கள் சசிகுமார்(31), ரவீந்திரன்(24) ஆகியோருடன் உரப்பனூர் மந்தையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சசிகுமார் கத்தியால் சுந்தரபாண்டியின் வயிற்றில் குத்தினார். மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சுந்தரபாண்டி அனுப்பி வைக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து சசிகுமார், ரவீந்தரனை தேடி வருகின்றனர்.