search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ. 440 கோடியில் மதுரை ரெயில் நிலையம் விரிவாக்கம்
    X

    ரூ. 440 கோடியில் மதுரை ரெயில் நிலையம் விரிவாக்கம்

    • ரூ. 440 கோடியில் மதுரை ரெயில் நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
    • 4 மாடிகளுடன் நுழைவுவாயில் அமைக்கப்படுகிறது.

    மதுரை

    மதுரைரெயில் நிலையத்தில் பயணிகள் நெரிசல் இல்லாமல் எளிதாக சென்று வரும் வகையில்ரெயில் நிலைய கட்டிடம் மறு சீரமைப்பு செய்யப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக பார்சல் சேவை, பயணிகள் வருகை, புறப்பாடு ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்படும்.

    மதுரைரெயில் நிலைய கிழக்கு-மேற்கு நுழைவுவாயில்களை இணைக்கும் வகையில் பயணிகள் காத்திருப்பு அரங்கு அமைய உள்ளது. இந்த அரங்குக்கு கீழேரெயில் தண்டவாள பாதைகள் செல்லும். பயணிகள் காத்திருப்பு அரங்கில் ஓய்வு அறை, கழிப்பறை, உணவகங்கள் ஆகியவை கட்டப்பட உள்ளன.

    இந்த அரங்கில் இருந்து நடைமேடைகளுக்கு செல்வதற்காக மின் தூக்கி, எஸ்கலேட்டர் ஆகியவை அமைக்கப்படுகிறது. 22 ஆயிரத்து 500 ச.மீ. பரப்பளவில் 4 மாடிகளுடன் கிழக்கு நுழைவுவாயில் கட்டிடம் அமைய உள்ளது. தரைதளத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படும்.

    மாடிகளில்ரெயில்வே சேவை அலுவலகங்கள் அமைக்கப்படும். மேலும் 250 வாகனங்கள் (கார்) நிறுத்தும் வகையில் கிழக்கு-மேற்கு நுழைவுவாயில் பகுதியில் பல்லடுக்கு வாகன காப்பகம் அமைய உள்ளது.

    அதேபோல 2000 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தும் வகையில் கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் பல்லடுக்கு வாகன காப்பகம் கட்டப்பட உள்ளது. பார்சல் சேவைக்காக தனி நடை மேம்பாலம் கட்டப்படும்.ரெயில் நிலையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

    மதுரைரெயில் நிலையத்தில் இருசக்கர வாகனம், ஆட்டோ ரிக்சா, கார் ஆகியவை சென்று வர தனித்தனி பாதைகள் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர 6 நடைமேடைகளும் புதிய மேற்கூரையுடன் புனரமைக்கப்படுகிறது.

    தற்போது உள்ள 2 நடை மேம்பாலங்களும் மேம்படுத்தப்பட உள்ளது. மேற்கு நுழைவு வாயிலில் உள்ளரெயில் நிலைய கட்டிடமும் நவீன வசதிகளுடன் அமைகிறது. இந்த திட்டத்திற்கான உத்தேச செலவு ரூ. 440 கோடி ஆகும்.

    மதுரைரெயில் நிலையத்தில் மேற்கண்ட அனைத்து பணிகளையும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நடைபெற உள்ளது என்று கோட்டரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×