

அலங்காநல்லூர்
சித்திரை திருவிழாவையொட்டி அழகர் கோவில் கள்ளழகர் கோவில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட தள்ளு உண்டியல்கள் முதற்கட்டமாக நேற்று திறந்து எண்ணப்பட்டன.
தற்காலிக 39 தள்ளு உண்டியலில் முதற்கட்டமாக 20 உண்டியல்கள் வரை அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் ரூ.75 லட்சத்து 11 ஆயிரத்து 574ம், தங்கம் 10 கிராம் 100 மில்லியும், வெள்ளி 347 கிராமும் காணிக்கையாக கிடைத்தன.
உண்டியல் திறப்பின் போது கோவில் துணை ஆணையர் அனிதா, இருக்கன்குடி உதவி ஆணையர் கருணாகரன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.