மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.20.98 லட்சம் அபராதம்

மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.20.98 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. விருதுநகர் மின்பகிர்மான வட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.
மின் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.20.98 லட்சம் அபராதம்
Published on

மதுரை

மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள், விருது நகர் மின்பகிர்மான வட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.

கோவிலாங்குளம், தொட்டி யங்குளம், வட பாலை, தென்பாலை, திருச்சுழி, அரசகுளம், மேல கள்ளன்குளம், திம்மாபுரம், காஞ்சநாயக்கன்பட்டி, தம்பி பட்டி, தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜ பாளையம், தச்சநேந்தல், ரெட்டியாபட்டி, வி.கரிசல்குளம், தெற்கு காரியாபட்டி, வடக்கு காரியா பட்டி, கீழராஜ குலராமன், அசிலாபுரம் ஆகிய பகுதிகளில் 24 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.19 லட்சத்து 57 ஆயிரத்து 804 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மின் திருட்டில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டவர்களிடம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் அபராதம் பெறப்பட்டது.

மதுரை மண்டலத்தில் ஒட்டுமொத்தமாக மின் திருட்டில் ஈடுபட்டதாக ரூ.20 லட்சத்து 98 ஆயிரத்து 804 அபராதம் பெறப்பட்டுள்ளது.

மதுரை மண்டலத்தில் எவரேனும் மின் திருட்டில் ஈடுபடுவது தெரிய வந்தால், மண்டல மின்வாரிய அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளர் செல்போன் எண் 94430 37508-ல் தகவல் தெரிவிக்கலாம் என்று மதுரை மண்டல மின்வாரிய அமலாக்கப் பிரிவு செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com