இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு

இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வீட்டில் மயங்கி விழுத அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இளம்பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் எதிர்ப்பு
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பச்சகோபன்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். இவரது மனைவி மாலதி (வயது28). இவர் கடந்த 2 மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலை வீட்டில் மயங்கி விழுத அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்படி டாக்டர்கள் கூறி உள்ளனர். ஆனால் அதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மாலதி உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.அவர்களுடன் உறவி னர்கள் வாக்குவாதம் செய்து கட்டாய பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் மாலதி உடலை கைப்பற்றி ஆட்டோவில் ஏற்றி ஊருக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

இது குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகம் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆட்டோவில் ஏற்றபட்ட மாலதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com