பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Published on

மதுரை

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆனையூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளான ஆனையூர், பார்க்டவுன், நாகனாகுளம், அய்யர் பங்களா, திருப்பாலை, கண்ணனேந்தல், உத்தங்குடி, கற்பக நகர், பரசுராம்பட்டி, லூார்து நகர், ஆத்திக்குளம், புதூர், வள்ளுவர் காலனி, எஸ்.ஆலங்குளம், அலமேலு நகர், கூடல்நகர், மேலமடை, பாண்டிகோவில், சவுராஷ்டிராபுரம், தாசில்தார் நகர், வண்டியூர் ஆகிய பகுதி பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் மதுரை மாநகராட்சி செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com