search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
    X

    பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

    • மதுரையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சியின் வடக்கு மண்டல அலுவலகத்தில் வருகிற 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். வடக்கு மண்டலத்திற்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின்ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம்.

    நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்ன சொக்கிகுளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்த மங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய வார்டுகளை சேர்ந்த பொது மக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் பங்கேற்று குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×