705 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

மதுரையில் 705 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
Published on

மதுரை

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.  மதுரை அரசு மருத்துவ மனையில் நடந்த முகாமை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை அரசு மருத்துவமனை ‘டீன்’ ரத்தினவேல், சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடமாடும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்காக 7 ஆயிரத்து 636 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 

இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார்கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 705 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டன. இன்று மட்டும் 2 லட்சத்து 66 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com