பள்ளியை திறக்க பெற்றோர் எதிர்ப்பு

விஷப்பூச்சி கடித்து மாணவர் பரிதாபமாக இறந்தார். பள்ளியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் வேளச்சேரி பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி உள்ளது. இங்கு செம்பட்டி அருகே உள்ள பூ மங்களப்பட்டியைச் சேர்ந்த செந்தமிழன் சுமதி தம்பதியரின் மகன் நிதிஷ் (12) 8-ம் வகுப்பு படித்தான்.

கடந்த 22-ந்தேதி பள்ளியில் இருந்த போது விஷபூச்சி அவனை கடித்தது. இதில் அவன் பரிதாபமாக இறந்தான்.

தகவல் அறிந்த உறவினர்கள் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரண மாக பள்ளி மூடப்பட்டி ருந்தது. இந்த நிலையில் இன்று பள்ளி திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீண்டும் பள்ளியை திறக்கக்கூடாது என்று கோரி பள்ளியின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இன்ஸ்பெக்டர் பத்மநாபன், ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் போராட்ட த்தில் ஈடுபட்டவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி மீண்டும் மூடப்பட்டது. அதன் பிறகு பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com