மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டம்

மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டம் நடந்துது. இந்த நாட்டில் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழியை காப்பாற்று வதற்காகவும் பலர் தியாகங்கள் செய்துள்ளனர்
மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டம்
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க. சார்பில் மொழிப் போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் முகமது யாசின் தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது, தமிழர்களுக்கு உரிமையை பெற்றுக்கொடுத்த தினமான ஜனவரி 25 மொழிப்போர் தியாகி தினமாக அறிவித்த வர் கலைஞர் கருணா நிதி. இந்த நாட்டில் தமிழர்களுக்காகவும், தமிழ் மொழியை காப்பாற்று வதற்காகவும் பலர் தியாகங்கள் செய்துள்ளனர் என்றார்.

கூட்டத்தில் சோழ வந்தான் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன், வல்லாள பட்டி சேர்மன் குமரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திர பிரபு, ராஜராஜன், பாலகிருஷ்ணன், பழனி, வல்லாளபபட்டி பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com