search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்தம்
    X

    தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் இன்று சித்திரை திருவிழா முகூர்த்தம் நடந்தது. 

    தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்தம்

    • தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்த விழா நடந்தது.
    • 9-ந்தேதி காலை 10.32 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலை சென்றடைகிறார்.



    தேனூர் மண்டபத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    மதுரை

    மதுரை அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை திருவிழா மே மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது. இதில் முதல் நிகழ்ச்சியாக கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் இன்று காலை நடந்தது.

    அப்போது ஆயிரம் பொன் சப்பரத்தில் வைக்கப்படும் யாழி முகத்துக்கு நாணல் புல், மாவிலை, பூ மாலைகள், சந்தனம், தாம்பூலம், தேங்காய், பழங்கள் வைத்து, நூபுர கங்கை தீர்த்தத்தால், அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதன் பிறகு வேத மந்திரங்கள்-மேள தாளம் முழங்க வர்ணம் பூசப்பட்ட முகூர்த்த கால்கள், மாவிலை- மாலைகளுடன் இணைக்கப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள ராஜ கோபுரம் முன்பு முகூர்த்தக் கால் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கின. இதையொட்டி ஆயிரம் பொன் சப்பரத் துக்கான தலையாலங்கார பூஜை நடத்தப்பட்டது. பின்னர் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தல்லாகுளம் மண்டகப்படி சங்க தலைவர் முத்துவிநாயகம், கோவில் துணை கண்காணிப்பாளர் ராமசாமி, மீனாட்சி அம்மன் கோவில் தலைமை பட்டர் ஹாலாஸ்யநாதன், வண்டியூர் தலைமை பட்டர் சங்கரநாராயணன், தேனூர் கிராம கமிட்டி நிர்வாகிகள் சோனைமுத்து, சாமிக்காளை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை மாவட்டம் அழகர்கோவில் சித்திரை பெருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் சன்னதி முன்பு கொட்டகை முகூர்த்தம் நடந்தது.

    இதையொட்டி சுந்தர ராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மே 3-ந் தேதி இரவு 7 மணிக்கு தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்படுகிறார். மே 4-ந்தேதி காலை 6 மணிக்கு, மூன்றுமாவடியில் எதிர் சேவை நிகழ்ச்சி நடக்கிறது.

    கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 5-ந்தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் நடக்கிறது.

    அப்போது கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்த ருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடக்கும்.

    வருகிற 6-ந்தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவி லில் இருந்து கள்ளழகர் சேஷ வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாக னத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அதன் பிறகு ராமராயர் மண்டபத்தில் நள்ளிரவு 12 மணி முதல் விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 7-ந்தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர், மோகினி அவதாரத்தில் காட்சி அளிக்கிறார். மாலை 2 மணிக்கு கள்ளழகர் ராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லகில் புறப்படுகிறார்.

    வருகிற 8-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து கள்ளழகர் பூப்பல் லக்கில் அழகர்கோவில் புறப்படுகிறார். 9-ந்தேதி காலை 10.32 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலை சென்றடைகிறார்.

    Next Story
    ×