அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

பாலமேடு அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வலையபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வ.புதூர் கிராமத்திற்கு மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. 

கடந்த 2 மாதங்களாக இந்த கிராமத்திற்கு வரும் பஸ் சரிவர குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படவில்லை. இதனால் இந்த பஸ் மூலம் செல்லும் அரசு பள்ளி மாணவ- மாணவிகளும், கல்லூரி மாணவர்களும், வேலைக்காக வெளியூர் செல்லும் தொழிலா ளர்களும், விவசாயிகளும், குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.  

வ.புதூர் கிராம மக்கள் அரசு போக்கு வரத்து அதிகாரி களிடம் ஒரு மாதத்திற்கு முன்னரே இதுகுறித்து நேரில் சென்று புகார் மனுவாக வழங்கியும் நடவடிக்கை இல்லை. 

இந்த நிலையில் நேற்று மாலை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து புதூர் கிராமத்திற்கு வந்த அரசு பஸ்துசை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்ட த்தில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து வந்த அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

பஸ் போக்குவரத்து சரியான நேரத்தில் இயக்கப்ப டும் என்று தெரிவித்தன் பேரில் போராட்டம் கைவி டப்பட்டது. மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com