கோவில் பூசாரி வீட்டில் நகை -பணம் கொள்ளை

திருமங்கலத்தில் கோவில் பூசாரி வீட்டில் நகை -பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் பூசாரி வீட்டில் நகை -பணம் கொள்ளை
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 70). இவர் சந்தைப்பேட்டையில் உள்ள பெத்தனசாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார்.

2 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பா றையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு பாண்டி குடும்பத்துடன் சென்று விட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 2 பவுன் 4 கிராம் நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பினர்.

இந்த நிலையில் வீடு திரும்பிய பாண்டி கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக அவர் திருமங்கலம் நகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தினர்.

அப்போது கொள்ளையர்களின் கைரே கைகள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து போலீசார் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை தேடி வருகி ன்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com