search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாடுபிடி வீரர்களுக்கு தீவிர பயிற்சி
    X

    மதுரை முடக்கத்தான் பகுதியில் ஜல்லிக்கட்டு பயிற்சி பெறும் மாடுபிடி வீரர்கள்.

    மாடுபிடி வீரர்களுக்கு தீவிர பயிற்சி

    • ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக மாடுபிடி வீரர்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • இந்தப் பயிற்சிகள் மூலம் அறிந்துகொள்ள முடிவதாகவும் மாடுபிடிவீரர்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. வருகிற 15-ந் தேதி அவனியாபுரத்திலும், 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள் மதுரையை சுற்றிய பல பகுதிகளிலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மதுரை முடக்கத்தான் பகுதியிலும் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டுக்காக பயிற்சி எடுத்து வருகின்றனர். தாங்கள் வளர்த்து வரும் காளைகளை ஓடி வரச் செய்து அவற்றை வேகமாக தாவிப்பிடிப்பதற்காக பயிற்சி மேற்கொள்கின்றனர்.

    மேலும் சுற்று மாடுகள் போல் மாடுகளை சுற்றிவரச் செய்தும் பயிற்சி பெறுகின்றனர். இந்தப் பயிற்சிகள் தாங்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறப்பாக பங்கேற்பதற்கான நம்பிக்கையை அளிப்பதாகவும், மேலும் மாடுகள் எப்படி ஓடிவரும், அவற்றை எப்படி தாவி பிடிப்பது என இந்தப் பயிற்சிகள் மூலம் அறிந்துகொள்ள முடிவதாகவும் மாடுபிடிவீரர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×