மதுரை பள்ளிகளில் துப்புரவு பணிகள் தீவிரம்

வருகிற 13- ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. மதுரை பள்ளிகளில் துப்புரவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Published on

மதுரை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. மாணவ-மாணவிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வந்தனர். அதன் பின்னர் கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவடைந்தது. பின்னர் கோடை காலத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவ-மாணவிகள் சுற்றுலா தலங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்து வந்தனர்.

இந்தநிலையில் வருகிற 13-ந் தேதி கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com