சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு.
சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
Published on

மதுரை

திருப்பரங்குன்றம் யூனியன் நிலையூர் 1-வது பிட், கைத்தறிநகர் ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றன.

மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு கைத்தறிநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com