மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது. 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 4 மணி நேரம் முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 4 மணி நேரம் முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
Published on

உசிலம்பட்டி

மதுரை புறநகர் மாவட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் முருகன், பொருளாளர் சின்ன கருப்பு, ஒன்றிய செயலாளர் சின்னச்சாமி, ஒன்றிய தலைவர் நாகராஜ், ஒன்றிய பொருளாளர் வீரய்யா மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிக்கு 4 மணி நேரம் முழு ஊதியத்துடன் வேலை வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யூனியன் ஆணையாளரிடம் மனு கொடுத்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com