search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவ இளைஞர்களுக்கு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி
    X

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை அலங்காநல்லூர் ஒன்றியம், அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை உறுப்பினர்களுக்கு மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிறுவனர் நாகேந்திரன் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தபோது எடுத்த படம்.

    மீனவ இளைஞர்களுக்கு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி

    • மீனவ இளைஞர்களுக்கு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி நடந்தது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யோக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப் பட்டது.

    கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பி னர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். இத்திட்டதின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறை களை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை/துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவ லக வேலை நாட்களில் விலையின்றி கொள்ளலாம். பெற்று விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணைய தளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவ லகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்க ளுக்கு சம்பந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி, துணை, இணை இயக்குநர்கள் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×