search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்க்கரை, இதய நோய்கள் முக்கிய உயிர்க் கொல்லியாக மாறும்-டீன் பேச்சு
    X

    சர்க்கரை, இதய நோய்கள் முக்கிய உயிர்க் கொல்லியாக மாறும்-டீன் பேச்சு

    • மதுரை தனியார் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • அடுத்த 10 ஆண்டுகளில் சர்க்கரை, இதய நோய்கள் முக்கிய உயிர்க் கொல்லியாக மாறும் என அரசு ஆஸ்பத்திரி டீன் பேசினார்.

    மதுரை

    மதுரை தனியார் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

    சர்க்கரை நோய் இன்னும் 10 ஆண்டுகளில் மேஜர் கில்லராக இருக்கும். ஒரு காலத்தில் காலரா போன்ற நோய்கள் மேஜர் கில்லராக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகளில் சர்க்கரை நோய், இருதய நோய்கள் மேஜர் கில்லராக இருக்கும். இது மருத்துவமனைகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். நோயாளிகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகும். மக்களை தேடி மருத்துவம் மூலம் வீடு தேடி சென்று மருந்து, மாத்திரை கொடுத்து அரசு முயற்சிகள் மேற்கொண்டாலும் வரும் காலத்தில் நோய்களின் தாக்கம், பாதிப்பு அதிக அளவில் இருக்கும். எனவே இந்த சர்க்கரை நோய் குறித்து மக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டி யது அவசியம். இதை அரசு, தனிநபர்களால் மட்டும் செய்ய முடியாது. அனைத்து தரப்பிலும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    வயிற்றுப் பகுதி (தொப்பை) நெஞ்சுக்குள் இருந்தால் சர்க்கரை நோய் வராது. ஆபத்தும் வராது எனவே தனியார் மருத்துவமனைகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி யது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×