தங்க கவசத்தை கலெக்டரிடம் ஒப்படைக்குமாறு தேவர் அமைப்பு கோரிக்கை

தங்க கவசத்தை கலெக்டரிடம் ஒப்படைக்குமாறு தேவர் அமைப்பு கோரிக்கை விடுத்தனர்.2017-ம் ஆண்டு 2 அணிகளாக பிரிந்து, தேவரின் தங்க கவசத்திற்கு உரிமை கோரியது.
தங்க கவசத்தை கலெக்டரிடம் ஒப்படைக்குமாறு தேவர் அமைப்பு கோரிக்கை
Published on

மதுரை

மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரிடம் தேவர் தேசபக்த முன்னணி நிர்வாகிகளான முருகன், ஞானசேகரன், கவிக்குமார் ஆகியோர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க கடந்த 2017-ம் ஆண்டு 2 அணிகளாக பிரிந்து, தேவரின் தங்க கவசத்திற்கு உரிமை கோரியது. அப்போது அன்றைய அரசு தங்கக் கவசத்தை கலெக்டர் வசம் ஒப்படைத்தது. இப்போது அ.தி.மு.க. மீண்டும் 2 அணிகளாக பிரிந்துள்ளது.

2017-ம் ஆண்டு எடுத்த முடிவின்படி கலெக்டரே தங்ககவசத்தை பெற்று, தேவர் சிலைக்கு அணிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com