பஸ் நிறுத்த தரைத்தளம் சேதம்

மதுரையில் தொடர்ந்து பெய்த மழையால் வசந்தம் நகர் பஸ் நிறுத்த தரைத்தளம் சேதமடைந்துள்ளது.பல மணி நேரத்துக்கு பின்னர் மழைநீர் வடிந்தது.
மதுரை வசந்தம் நகர்  பஸ் நிறுத்தம் பகுதியில் தேங்கிய மழை வெள்ளம்.
மதுரை வசந்தம் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் தேங்கிய மழை வெள்ளம்.
Published on

மதுரையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.நேற்று இரவும் மதுரையில் பலத்த மழை பெய்தது.இதனால் வசந்தம் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. அப்போது பஸ்களில் வந்து இறங்கிய பயணிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பல மணி நேரத்துக்கு பின்னர் மழைநீர் வடிந்தது.

இந்த நிலையில் வசந்தம் நகர் பஸ் நிறுத்தம் தரைதளத்தை மழைநீர் சேதமாக்கி விட்டதால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அதனை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com