மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை தெற்கு கோட்டத்தில் வருகிற 16-ந்தேதி மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

மதுரை

மதுரை தெற்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி(வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்சங்கம், யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சியம்மன் கோவில், மாகாளிப்பட்டி, திருமலைநாயக்கர் மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com