தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்
மதுரை
மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் கூட்டம் அலைமோதும். பயணிகளை பஸ்சில் ஏற்றுவது தொடர்பாக அடிக்கடி டிரைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், மல்லுவார்பட்டியைச் சேர்ந்த டிரைவர் நடராஜன், கலுங்குவார்பட்டியைச் சேர்ந்த டிரைவர் ரமேஷ் குமார் (37) ஆகிய 2 பேருக்கும் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று நடராஜன் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ரமேஷ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அஜித்குமார், பாண்டி விக்னேஷ், ரூபன் மற்றும் சிலர் நடராஜனை சரமாரியாக தாக்கிவிட்டு தபப்பினர். இதில் அவர் படுகாய மடைந்தார்.
இந்த மோதல் தொடர்பாக கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ரமேஷ்குமார், அஜித்குமார், பாண்டி விக்னேஷ், ரூபன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

