search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டிய விவகாரம்-மதுரை துணை மேயர் மீது புகார்
    X

    போக்குவரத்து சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டிய விவகாரம்-மதுரை துணை மேயர் மீது புகார்

    • மதுரை மாநகராட்சி துணை மேயர் மீது, பா.ஜனதா பட்டியல் அணி மாநில செயலாளர் புகார் மனு கொடுத்துள்ளார்.
    • மதுரை ஜெய்ஹிந்த்புரம், எம்.ஜி.ஆர் கிழக்குத் தெருவில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளதாக கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை விளாங்குடி செம்பருத்தி நகரை சேர்ந்தவர் சிவாஜி. பா.ஜனதா பட்டியல் அணி மாநில செயலாளராக உள்ளார். இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துகலெக்டர் அனீஷ்சேகரிடம் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ஜெய்ஹிந்த்புரம், எம்.ஜி.ஆர் கிழக்குத் தெருவில் 20 அடி அகல பொதுரோட்டை 80-ம் வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி துணை மேயருமான நாகராஜன் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டிள்ளார். இதற்கான ஆவணங்களை பத்திர பதிவு அலுவலகத்தில் சரிபார்த்த போது, சுப்பிரமணியன் என்பவரிடம் நாகராஜன் பொது அதிகார ஆவணம் மூலம் 2176 ச.அடி நிலம் வாங்கி உள்ளார்.

    அதன் பிறகு மாநகரா ட்சியின் முறையான அனுமதி பெறமால் 544 ச.அடி வீதம் 4 பேருக்கு கிரையம் செய்து கொடுத்து உள்ளார். இதில் 4-வது நபராக நாகராஜன் மனைவி செல்வராணி பெயரில் கிரையம் செய்து தரப்பட்டு உள்ளது.

    அங்கு 20 அடி அகல பொதுப்பாதை செல்வதாக பத்திரங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் நாகராஜன் கீழ்புறம் உள்ள ரோட்டை மறைத்து, 10 அடி இடத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளார். அதேபோல மேலும் ஒருவரும் 10 அடி பொது பாதைக்கு விட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.

    மாநகராட்சியில் துணை மேயர் பதவியில் இருந்து கொண்டு சட்டத்திற்கு புறம்பாக மாநகராட்சிக்கு செந்தமான ரோட்டை ஆக்கிரமிப்பு செய்து பொது மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி வரும் நாகராஜன் மற்றும் அவராது மனைவி செல்வராணி மீது நடவடிக்கை எடுத்து, மேற்படி அக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதுப்பா தையை ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×