விதி மீறி வாகனத்தின் மீது ஏறியவர்கள் மீது வழக்கு

விதி மீறிய 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விதி மீறி வாகனத்தின் மீது ஏறியவர்கள் மீது வழக்கு
Published on

உசிலம்பட்டி

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எம்.மூர்த்தி தேவர் கட்சியை சேர்ந்த 19 பேர் விதிமுறை மீறி வாகனத்தின் மீது ஏறி உசிலம்பட்டி வழியாக மதுரை சென்றனர்.

இவர்களை உசிலம்பட்டி தேவர் சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். வாகனத்தில் மேல் இருந்தவர்களை கீழே இறங்கி வாகனத்தில் செல்லுமாறும் வாகனத்தின் மேல் ஏறக்கூடாது எனவும் கூறினர்.

இதில் வாகனத்தில் வந்தவர்களுக்கும்-போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் போலீசார் வாகனத்தில் வந்தவர்களை நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இவர்கள் மீது தேவர் ஜெயந்தி விழாவிற்கு விதிமுறை மீறி வாகனத்தில் வந்ததாகவும், போலீசாருடன் தகராறு செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com