தொழில் மேம்பாட்டு மைய விழிப்புணர்வு முகாம்

சிறு, குறு தொழில் மேம்பாட்டு மைய விழிப்புணர்வு முகாம் நடந்தது. விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் மானிய உதவி, பயிற்சியுடன் கடன் உதவி உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொழில் மேம்பாட்டு மைய விழிப்புணர்வு முகாம்
Published on

உசிலம்பட்டி

உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் மகளிர், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மகளிர் சுய உதவி குழு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம், தொழில் வாய்ப்பு முகாம் மற்றும் அனைத்து வகையான வேலைகளுக்கும் மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. எம்.எஸ்.எம்.இ. தலைவர் முத்துராமன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயசெல்வம், செல்லம்பட்டி வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், திட்ட இயக்குனர் காளிதாஸ், பாப்பாபட்டி ஒன்றிய கவுன்சிலர் வீரலட்சுமி செந்தில்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் மானிய உதவி, பயிற்சியுடன் கடன் உதவி உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com