என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    உடல் ஆரோக்கியம் குறித்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி
    X

    உடல் ஆரோக்கியம் குறித்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உடல் ஆரோக்கியம் குறித்த சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • தேவதாஸ் மருத்துவமனை இயக்குனர் சதீஷ் தேவதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உசிலம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி சார்பில் சைக்கிள் பயணத்தால் ஏற்படும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பேரணி நடந்தது. திருமங்கலம் அருகே உள்ள மறவன்குளத்தில் இருந்து கண்டு குளம் வரை 6 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் பயணம் நடந்தது. இதில் மாணவ-மாணவிகளும், மற்ற பள்ளி மாணவர்கள், பெற்றோர்களும் பங்கேற்றனர். தேவதாஸ் மருத்துவமனை இயக்குனர் சதீஷ் தேவதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தாளாளர் மதிவாணன், ஷாலினி முன்னிலை வகித்தனர். முதல்வர் கீதா ராணி, அகாடமி இயக்குனர் சத்யா, உடற் கல்வி ஆசிரியர் முத்தையா ஆகியோர் பள்ளி மாணவர்களுடன் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கண்டு குளத்தில் உள்ள பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்களுக்கு நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×