search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதீன மட சொத்துகள் ஐகோர்ட்டு உத்தரவுபடி மீட்கப்பட்டு சீல் வைப்பு
    X

    மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த தங்கும் விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    ஆதீன மட சொத்துகள் ஐகோர்ட்டு உத்தரவுபடி மீட்கப்பட்டு சீல் வைப்பு

    • மதுரை ஆதீன மட சொத்துகள் ஐகோர்ட்டு உத்தரவுபடி மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
    • பிரதமர் அனைத்து ஆதீனங்களையும் சந்தித்தார் அவரின் தமிழ் உணர்வு பாராட்டுக்குரியது.

    மதுரை

    மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் பழமையான திருஞான சம்பந்த சுவாமி கள் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் அருகில் இருந்த ஆதீனத்திற்கு சொந்தமான 3,200 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து தங்கும் விடுதி அமைக்கப் பட்டது. அந்த இடத்தை மீட்கும் பணிகளில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வி தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி மதுரை ஆதீனத்தின் முன் பகுதியில் சண்முகம் மற்றும் இளவரசன் ஆகியோரிடம் இருந்து 3,200 சதுர அடி இடம் மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனி டையே மதுரை ஆதீனத்தின் முன்புறம் 3,200 சதுர அடி இடத்தினை ஆக்கிரமித்த தற்காக 2 வாரத்திற்குள் ரூ.25 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கோர்ட்டு உத்தரவை அவர்கள் நிறைவேற்றா ததால் தங்கும் விடுதிக்கு சீல் ைவக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் மதுரை ஆதீனம் கூறுகையில், மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடம் சட்ட ரீதியாக மீட்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆக்கிரமிப்பில் உள்ள ஆதீனத்திற்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் மீட்டெடுப்போம்.

    மேலும் ஆதீனத்திற்கு சொந்தமாக மதுரை விமான நிலையம் அருகே உள்ள 1,100 ஏக்கர் இடத்தில் விவசாய பல்கலைகழகம் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.பிரதமர் அனைத்து ஆதீனங்களையும் சந்தித்தார் அவரின் தமிழ் உணர்வு பாராட்டுக்குரியது.

    Next Story
    ×