என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நல்லாசிரியர் விருது பெற்ற மதுரை ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா
  X

  நல்லாசிரியர் விருது பெற்ற மதுரை ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நல்லாசிரியர் விருது பெற்ற மதுரை ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடக்கிறது.
  • இந்த விழா எட்வர்டு மன்றத்தில் நாளை நடக்கிறது.

  மதுரை

  ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களை பாராட்டி கவுரவிக்கும் வகையில் மதுரை மேலவெளி வீதியில் உள்ள விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் பாராட்டு விழா நடைபெறும்.

  இந்த ஆண்டு கடந்த 5-ந்தேதி தமிழக அரசின் நல்லாசிரியர் விருது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

  இவர்களை பாராட்டும் வகையில் மதுரை விக்டோரியா மன்றம் சார்பில் பாராட்டு விழா நாளை (8-ந்தேதி) மாலை 5 மணிக்கு தங்கரீகல் திரையரங்கில் நடைபெ றுகிறது.

  விக்டோரியா எட்வர்டு மன்ற செயலாளர் டாக்டர் இஸ்மாயில் வரவேற்று பேசுகிறார். தலைவர் சுடலை தலைமை தாங்குகிறார்.

  விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா கலந்து கொண்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

  இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

  நிகழ்ச்சியை பட்டிமன்ற நடுவர் புலவர் சங்கரலிங்கம் தொகுத்து வழங்குகிறார்.

  Next Story
  ×