மோடி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

மோடி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
மோடி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பிரதமர் நரேந்திர மோடியின் 72- வது பிறந்த நாள் விழாவை யொட்டி சிறப்பு பூஜை, அன்னதானம், மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

குட்லாடம்பட்டி முத்தாலம்மன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் ஓ.பி.சி.அணி தொழில் நுட்ப பிரிவு ஒருங்கி ணைப்பாளர் கே.ஆர்.முரளி ராமசாமி தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

குலசேகரன்கோட்டை பொன்மலை அடிவாரத்தில் உள்ள அன்பே கடவுள் பார்வையற்றோர் இல்லத் தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் வேல்செழியன், முன்னாள் ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திகேயன், முன் னாள் ஊரக நகர் வளர்ச்சி பிரிவு பால்பாண்டி, தாஸ், மோகனசுந்தரம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com