search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் முப்பெரும் விழாவில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்
    X

    தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

    விருதுநகர் முப்பெரும் விழாவில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்

    • விருதுநகர் முப்பெரும் விழாவில் திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
    • மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திரளானோர் கலந்து கொண்டு முதல்வரை வரவேற்க வேண்டும்.

    மதுரை

    அண்ணா பிறந்த நாளான வருகிற 15-ந் தேதி மதுரையில் அண்ணா சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்.

    முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து திருப்பாலையில் உள்ள திருமண மண்டபத்தில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் பால சுப்ரமணியன் தலைமை யில் நடந்தது.

    பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், இலக்கிய அணி செயலாளர் நேரு பாண்டியன், இளைஞர் அணி அமைப்பாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி செயலாளர் மருதுபாண்டி முன்னிலை வகித்தனர்.

    இதில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி பங்கேற்றார். அவர் பேசுகையில், வருகிற 15-ந் தேதி முதல்-அமைச்சர்

    மு.க.ஸ்டாலின் மதுரையில் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    மேலும் அன்று மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சிகளில் மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திரளானோர் கலந்து கொண்டு முதல்வரை வரவேற்க வேண்டும்.

    அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகரில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் திரளான தொண்டர்களுடன் நாமும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் கென்னடி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா, வக்கீல் கலாநிதி, பகுதி செயலாளர் சசிகுமார், ராமமூர்த்தி, மகளிர் அணி ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், சிறை செல்வன், தனசேகர், பசும்பொன் மாறன், வாடிப்பட்டி பால்பாண்டி, வக்கீல் கார்த்திக்,ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×