ரூ.5.45 லட்சம் அபராதம் வசூல்

மதுரையில் ரூ.5.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.66 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர்.
ரூ.5.45 லட்சம் அபராதம் வசூல்
Published on

மதுரை

மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடங்களில் சோதனை நடத்தினர்.

விருதுநகர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட காரியாபட்டி, விருதுநகர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, மல்லாங்கிணறு, ஓ.மேட்டுப்பட்டி, கன்னிசேர்வைபட்டி ஆகிய பகுதிகளில், 8 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது.

மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.4 லட்சத்து 79 ஆயிரத்து 764 அபராதம் வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.66 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் ஒட்டுமொத்தமாக ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்து 764 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் தெரிந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com