வீட்டை சூறையாடிய 7 பேர் கைது

முன் விரோதம் காரணமாக வீட்டை சூறையாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

மதுரை

மதுரை பாலரெங்காபுரம் ஜானகி மாதவ அய்யர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(வயது48). இவரது மகள் அதே பகுதியில் உள்ள நடன வகுப்பில் படித்து வருகிறார். அவருக்கும் அங்குள்ள சிலருக்கும் முன்விரோதம் இருந்தது.

  இந்த நிலையில் 7 பேர் கும்பல் திரண்டு வந்து சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டது. அப்போது வீட்டின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக சக்திவேல் தெப்பக்குளம் போலீசில் புகார் கொடுத்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டை சூறையாடிய மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனி ஹரிபிரசாத்(19), காமராஜபுரம் வ.உ.சி தெரு பிரகாஷ் (19), காமராஜபுரம் ஜார்ஜ் ஜோசப் தெரு திருக்குமரன்(18), மணிகண்டன்(18), காமராஜபுரம் என்.எம்.ஆர். ரோடு லட்சுமணன்( 18), மற்றொரு மணிகண்டன் (19), சிந்தாமணி ராஜமான் நகர் மோகன் கார்த்திக்(18) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com