search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரியை சரமாரியாக அடித்து  உதைத்த 5 வாலிபர்கள் கைது
    X

    கைதான செந்தில்குமார், கார்த்திக் பிரபு, தீபக்ராஜா

    வியாபாரியை சரமாரியாக அடித்து உதைத்த 5 வாலிபர்கள் கைது

    • வியாபாரியை சரமாரியாக அடித்து உதைத்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சுதந்திரமாக வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி பஸ் நிலையம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை நடுரோட்டில் சரமாரி தாக்கி வேட்டியை உருவி, விரட்டு அடிப்பது போன்ற காட்சி கடந்த சில நாட்களாக சமூக வலை தளத்தில் வேகமாக பரவியது. நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்துக்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து போலீ சாரின் கவனத்துக்கு வந்தது. அதன் அடிப்படை யில் தெப்பக்குளம் போலீ சார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், தாக்கப்பட்டவர் மதுரை காமராஜர் சாலை சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் (வயது 27) என தெரியவந்தது.நுங்கு வியாபாரியான இவர் சம்பவத்தன்று வியா பாரத்துக்காக மோட்டார் சைக்கிளில் அனுப்பானடி பஸ் நிலைய பகுதிக்கு வந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் முன்னால் நின்றிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது தவறுதலாக லேசாக உரசியுள்ளது.

    உடனே மோட்டார் சைக்கிளில் இருந்த அனுப்பானடி அம்பேத்கார் நகரை சேர்ந்த போஸ் மகன் செந்தில்குமார் (20), சகோதரர்கள் அருண்குமார் (23), செல்வகுமார் மற்றும் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த அழகன் மகன் கார்த்திக் பிரபு (23), முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த காமராஜ் மகன் தீபக்ராஜா (23) ஆகியோர் சுந்தரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தோடு தரக்குறைவாக பேசியுள்ளனர்.

    மேலும் சுந்தரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கி, அவரது வேட்டியை உருவி விரட்டி அடித்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து போலீசார் மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தனர்.

    மதுரை நகரில் அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சாலையோரத்தில் கடை வைத்து பிழைப்பு நடத்தும் சிறுவியாபாரிகள் ரவுடிகளால் தாக்கப்பட்டு பணம் பறிக்கும் சம்பவம் சர்வ சாதரணமாக நடந்து வருகிறது. எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வியாபாரிகள் சுதந்திரமாக வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×