4,312 பெண்களுக்கு கருக்கலைப்பு; 11,830 பேருக்கு குடும்ப கட்டுப்பாடு

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 ஆண்டுகளில் 4,312 பெண்களுக்கு கருக்கலைப்பு, 11,830 பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4,312 பெண்களுக்கு கருக்கலைப்பு; 11,830 பேருக்கு குடும்ப கட்டுப்பாடு
Published on

மதுரை

மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் மருதுபாண்டி, மதுரை அரசு மருத்துவ மனையில் கடந்த 4 ஆண்டுகளில் எத்தனை கருக்கலைப்பு நடந்துள்ளது? எத்தனை பேர் குடும் கட்டுப்பாடு செய்துள்ளனர்? எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன? என்பது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் வாயிலாக கேட்டிருந்தார்.

இதற்கு மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்தது. அதில் கூறப்பட்டிருப்பதா வது:-

மதுரை அரசு மருத்துவமனையில் 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் 4,312 பெண்க ளுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக 2022-ம் ஆண்டு மட்டும் அதிகமாக 1,413 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டுகளில் 11,830 பேர் குடும்ப கட்டுப்பாடு செய்துள்ளனர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக 3,216 பேர் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் இந்த மருத்துவமனையில் 60 ஆயிரத்து 717 குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களில் 1,015 குழந்தைகள் இரட்டை யர்கள். 21 ஆயிரத்து 685 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.

மொத்த பிரசவத்தில் 64 சதவீதம் சுகப்பிரசவம் ஆகும். பிரசவத்தின் போது 197 தாய்மார்கள் இறந்துள்ளனர். 2021-ம் ஆண்டில் 69 பேர் பிரச வத்தின் போது அதிகபட்ச மாக இறந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை பாதி யாக குறைந்து 30 பேர் மட்டுமே இறந்தனர். 1,258 குழந்தைகள் பிரசவத்தின் போது இறந்தன. 2021 -ம் ஆண்டு 325 குழந்தை கள் அதிகபட்ச மாக இறந் துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com