கட்டிட தொழிலாளியை கொல்ல முயன்ற 3 பேர் கைது

மதுரை அருகே கட்டிட தொழிலாளியை கொல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டிட தொழிலாளியை கொல்ல முயன்ற 3 பேர் கைது
Published on

மதுரை

மதுரை அருகே உள்ள சிக்கந்தர் சாவடி, சுசி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு மகன் உத்தமராஜா உள்ளார்.

கட்டிட தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியில் லோடுமேனாக வேலை பார்க்கும் சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.சம்பவத்தன்று நள்ளிரவு இவர் கூடல்நகர் மெயின் ரோட்டுக்கு வந்தார். அப்போது இரும்புக்கடை அருகே 3 பேர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த கும்பல் உத்தமராஜாவை கத்தியால் குத்தி விட்டு தப்பியது.படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அலறியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தாயார் பாண்டியம்மாள், கூடல் புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்தமராஜாவை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற சிந்தாமணி, கல்லுடையான் கோவில் தெரு சந்திரசேகர் மகன் சதீஷ்குமார் (23), சிக்கந்தர் சாவடி, மந்தை அம்மன் கோவில் தெரு ராஜா (40), கோவில்பாப்பாகுடி, மதர் தெரசா ரோடு தினேஷ் குமார் (25) ஆகியோரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com