தந்தை-மகளை தாக்கிய 3 பேர் கைது

மதுரை அருகே தந்தை-மகளை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தந்தை-மகள் தாக்குதல்.
தந்தை-மகள் தாக்குதல்.
Published on

மதுரை

மதுரை அருகே உள்ள கூடக்கோவில் டி.புதூரை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது40). இவர் தனது அக்காள் கச்சம்மாளின் கணவர் பகவதியை 2வதாக திருமணம் செய்துள்ளார். கணவர் பகவதி மரணத்திற்கு பிறகு மஞ்சுளாவும், கச்சம்மாளும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

மஞ்சுளாவின் தந்தை பெருமாள்(75) சில நாட்களுக்குமுன்பு கச்சம்மாளிடம் 30ஆடுகளை ஒப்படைத்துள்ளார். அப்போது ‘ஆடுகளில் பாதியை மஞ்சுளாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். இருந்த போதிலும் கச்சம்மாள் ஆடுகளை ஒப்படைக்கவில்லை.

 சம்பவத்தன்று காலை பெருமாளும், மஞ்சுளாவும் கச்சம்மாள் வீட்டுக்கு வந்தனர். அப்போது ‘மஞ்சுளாவுக்கு சொந்தமான 15ஆடுகளை ஒப்படைக்க வேண்டும்‘ என்று பெருமாள் வலியுறுத்தினார்.   இதற்கு கச்சம்மாள் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. 

இதில் மஞ்சுளா, பெரு-மாள் ஆகியோரை கச்சம்மாள், மகன் பழனி-வேல், மனைவி வரலட்சுமி ஆகியோர் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் தந்தை, மகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து மஞ்சுளா கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கச்சம்மாள், பழனிவேல், வரலட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com