ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் மகா சண்டியாகம்

திருமங்கலம் அருகே உள்ள ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் மகா சண்டியாகம் நடைபெற்றது
ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் கன்னி பூஜை நடந்தது.
ஆயிரம் கண்ணுடையாள் கோவிலில் கன்னி பூஜை நடந்தது.
Published on

திருமங்கலம் 

திருமங்கலம் அருகே டி.புதுப்பட்டி சக்திகுளத்தில் ஆயிரம் கண்ணுடையாள் கோவில் மகாசக்தி பீடம் உள்ளது. மாசிமாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்றும் இன்றும் இரு நாட்கள் மகா சண்டிஹோமம் விமரிசையாக நடைபெற்றது. 

நேற்று காலை 7 மணியளவில்  விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், ஆகாய வரணம், வாஸ்து சாந்தியாக பூஜை, புண்யாக வாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுர்தி ஆகிய பூஜைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து காலை 5.30 மணியளவில் கோ பூஜை சங்கல்பம் சண்டியாகம் பூஜைகள் நடைபெற்றது. இதில் 16 வகையான பழங்கள் உள்ளிட்ட 108 வகையான பூஜை பொருட்களை மகா யாககுண்டத்தில் போட்டு வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சண்டி ஹோமம் நடைபெற்றது. 

இதற்கிடையே தம்பதியினர் பூஜை, சுமங்கலி பூஜை, கன்னி பூஜைகள் நடைபெற்றது. ஆயிரம் கண்ணுடையாள்  தீபதூப ஆராதனைகள் நடைபெற்றது. இன்று நடைபெற்ற சண்டி ஹோமத்திற்கு மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com