செந்துறையில் கடைக்காரரிடம் மாமூல் கேட்ட மதுரை போலி போலீஸ் கைது

அப்பகுதி வியாபாரிகளிடம் குட்கா, புகையிலை விற்பதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் கடையில் சோதனை நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.அவரது நடவடிக்கை யில் சந்தேகம் அடைந்த வியாபாரிகள் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அப்போது தான் போலியாக தயாரித்து வைத்திருந்த அடையாள அட்டையை காண்பித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சரவணன்.
கைது செய்யப்பட்ட சரவணன்.
Published on

நத்தம்:

நத்தம் அருகே செந்துறை பகுதியில் உள்ள கடைகளில் மதுரை மாவட்டம் மேலூர் மேலவளவை சேர்ந்த சரவணன் (வயது36) என்பவர் தான் மது விலக்கு போலீஸ் என கூறி ஆய்வு செய்துள்ளார். மேலும் அப்பகுதி வியாபாரிகளிடம் குட்கா, புகையிலை விற்பதாக புகார்கள் வந்துள்ளது. இதனால் கடையில் சோதனை நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.

நடவடிக்கை எடுக்காமல் இருக்க தனக்கு பணம் தர வேண்டும் என கேட்டு ள்ளார். அவரது நடவடிக்கை யில் சந்தேகம் அடைந்த வியாபாரிகள் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். அப்போது தான் போலியாக தயாரித்து வைத்திருந்த அடையாள அட்டையை காண்பித்துள்ளார். இது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து சரவணனை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர் போலி போலீஸ் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். சரவணன் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com