குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.3-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை:

மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவானது. இதனால் வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருந்த போதிலும் தமிழகத்தில் பெரிய அளவில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

3-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும்.

தரைக்காற்று வேகமாக வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com